மேலும் செய்திகள்
பத்தாம் வகுப்பு தேர்வு; இனிப்பு வழங்கி வாழ்த்து
04-Mar-2025
சேத்தியாத்தோப்பு: மழவராயநல்லுார் அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சேத்தியாத்தோப்பு தமிழ் மன்றம் அறக்கட்டளை சார்பில் எழுது பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது.நிகழ்ச்சிற்கு, அறக்கட்டளை நிறுவனர் ஆணைவாரி ஆனந்தன் தலைமை தாங்கினார். அறங்காவலர் ஜெயந்திஆனந்தன், நிதி அறங்காவலர் தாமரைசெல்வன், நிர்வாகிகள் ராஜசேகர், ஆனந்த், ஜெயராமன், கோபிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் காளிராஜ் வரவேற்றார்.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கால அட்டவணை, பேனா, பென்சில், காம்பஸ், பாகைமானி, பரிட்சை அட்டை உள்ளிட்ட தொகுப்புகளை வழங்கினர்.
04-Mar-2025