உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குறைகேட்பு கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்

குறைகேட்பு கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்

கடலுார்; கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில், பயனாளிகளுக்கு ரூ. 5.35 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் குறைகளை கேட்டு, மனுக்கள் பெற்றார். இதில், வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 515 மனுக்கள் பெறப்பட்டன. இதில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 23 மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்பூர்வ பாதுகாவலர், வரையறுக்கப்பட்ட பாதுகாவலர் நியமன சான்றிதழ்கள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 11,500 வீதம் 23,000 மதிப்பீட்டில் மடக்கு சக்கர வாகனத்தை கலெக்டர் வழங்கினார்.மேலும், மாவட்ட அளவிலான 2 சிறந்த ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு 4,000 மற்றும் 3,000 எனவும், 2 சிறந்த ரேஷன் கடை எடையாளர்களுக்கு 3,000 மற்றும் 2,000 என மொத்தம் 4 நபர்களுக்கு 12,000 மதிப்பீட்டில் ரொக்க பரிசு வழங்கினார். பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் பதிவுறு எழுத்தராக பணியாற்றிய கந்தகுமார் பணியின்போது இறந்ததால், அவர் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியாக வழங்கப்பட்டது.அப்போது, டி.ஆர்.ஓ., ராஜசேகரன், பயிற்சி கலெக்டர் ஆகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை