| ADDED : டிச 02, 2025 04:54 AM
சிறுபாக்கம்: சிறுபாக்கம் அருகே கட்டுமான தொழிலாளர்களுக்கு பயிற்சி மற்றும் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கணேசன் வழங்கினார். சிறுபாக்கம் அடுத்த மங்களூர் கிராம தொழிற்பயிற்சி நிலையத்தில், கட்டுமானம், கம்பி வளைப்பு, பிளம்பர், வெல்டர் உள்ளிட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கு, ரூ. 800 உதவித் தொகையுடன் பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு பயிற்சியில் பங்கேற்கும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி, மங்களூர் ஒன்றிய அலு வலகத்தில் நடந்தது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் தலைமை தாங்கி, பயிற்சியில் பங்கேற்ற தொழிலாளர்களுக்கு பயிற்சி கையேடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது, விழுப்புரம் மண்டல இயக்குனர் பரமேஸ்வரி, தொழிலாளர் துணை ஆணையர் ராமு, செயல் அலுவலர் பாலக்கிருஷ்ணன், கல்லுாரி முதல்வர் மணிவேல், வேப்பூர் தாசில்தார் செந்தில்வேல், மங்களூர் தி.மு.க., ஒன்றிய செயலர் செங்குட்டுவன், பி.டி.ஓ.,க்கள் சண்முக சிகாமணி, சிவக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.