உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மனநல காப்பகத்தில் சீருடை வழங்கல்

மனநல காப்பகத்தில் சீருடை வழங்கல்

கடலுார் : கடலுார் மரியசூசை நகர் ஒயாசிஸ் தொண்டு நிறுவனத்தில், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, புத்தாண்டை முன்னிட்டு சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கடலுார் மூத்த வழக்கறிஞர் சிவமணி தலைமை தாங்கி, மனநலம் பாதிக்கப்பட்ட 100 பேருக்கு சீருடைகள் வழங்கினார். வழக்கறிஞர்கள் சரவணன், முகுந்தன், சத்யா முன்னிலை வகித்தனர்.அப்போது, தொண்டு நிறுவன தலைவர் எப்சிபா, நிர்வாக இயக்குனர் லெனின் பிரபாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !