உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பி.டி.ஓ., பதவியேற்பு 

 பி.டி.ஓ., பதவியேற்பு 

புவனகிரி: மேல் புவனகிரி ஊராட்சி ஒன்றிய, வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் பொறுப்பேற்றார். மேல்புவனகிரி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக (திட்டம்) பணியாற்றிய பாலாமணி, கடலுார் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை தணிக்கை பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக மங்கலம்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் (திட்டம்) பணியாற்றி வந்த முருகன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொறுப் பேற்றார். அவருக்கு அதிகாரிகள், அலுவலக ஊழியர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி