மேலும் செய்திகள்
சுற்றுச்சுவர் இல்லாததால் விபத்து அபாயம்
06-Sep-2025
புதுச்சத்திரம் : வேளங்கிப்பட்டு - அத்தியாநல்லுார் சாலையை சீரமைக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுச்சத்திரம் அடுத்த வேளங்கிப்பட்டு-அத்தியாநல்லுார் இடையே இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி சேந்திரக்கிள்ளை, பூவாலை, வேளங்கிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் புதுச்சத்திரம், பரங்கிப்பேட்டைக்கு சென்று வருகின்றனர். மேலும், வேளங்கிப்பட்டு பகுதியை சேர்ந்தவர்கள், தங்கள் நிலங்களுக்கு வேளாண் இடுபொருட்களை எடுத்துச் செல்லவும் பயன்படுத்தி வருகின்றனர். அத்தியாநல்லுார் பகுதி மக்கள் வேளங்கிபட்டில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலகம் மற்றும் ஊராட்சிமன்ற அலுவலகத்திற்கு தங்கள் அத்தியாவசிய தேவைக்கு வந்து செல்லவும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். சாலையில் ஆங்காங்கே ஜல்லிகள் பெயர்ந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
06-Sep-2025