உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பொதுவினியோக திட்ட குறைகேட்பு கூட்டம்

 பொதுவினியோக திட்ட குறைகேட்பு கூட்டம்

கடலுார்: கடலுார் தாலுகா அலுவலகத்தில் பொது வினியோக திட்ட குறைகேட்பு நேற்று கூட்டம் நடந்தது. இதில், குடிமைப்பொருள் தனி தாசில்தார் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். அவர், பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றுக் கொண்டார். இதில், கடலுார் தாலுகா பகுதிக்குட்பட்ட பொதுமக்கள் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் புதிய ரேஷன் கார்டு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 40க்கும் மேற்பட்ட மனுக்களை அளித்தனர். இநத மனுக்கள் மீது விசாரணை நடத்தி தீர்வு காணப்பட்டது. இநத கூட்டத்தில், வருவாய் ஆய்வாளர்கள் வீரசேகரன், ஷேமகிரிநாதன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை