உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 1,105 மனுக்கள் குவிந்தன.கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 9 பேருக்கு இலவச மனைப்பட்டாவிற்கான ஆணையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 4 பேருக்கு சிறப்பு சக்கர நாற்காலியும், மடக்கு ஊன்றுகோல், கண் கண்ணாடிகளை வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், ஆதிதிராவிடர் நல அலுவலர் லதா, மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாபு, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கர், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் ராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை