மேலும் செய்திகள்
தி.மு.க., பொதுக்கூட்டம்
10-May-2025
கடலுார்: வடலுார் நகர தி.மு.க., சார்பில் தி.மு.க., ஆட்சியின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. நகர செயலாளர் தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். நகரமன்ற தலைவர் சிவக்குமார் வரவேற்றார். நகரமன்ற துணைத்தலைவர் சுப்புராயலு, நகர பொருளாளர் விஜயராகவன், மாவட்ட பிரதிநிதிகள் கோவிந்தராஜ், சாகுல் அமீது, பழனி, துணை செயலாளர்கள் பழனி, பத்மாவதி ராஜபூபதி முன்னிலை வகித்தனர். அமைச்சர் பன்னீர்செல்வம் தி.மு..க., அரசின் நான்காண்டு கால சாதனைகள் குறித்து பேசினார். தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசகர் மனுஷ்யபுத்திரன், தலைமை பேச்சாளர் தமிழ்மணி பேசினர். மாவட்ட பொருளாளர் கதிரவன், ஒன்றிய செயலாளர்கள் குறிஞ்சிப்பாடி தெற்கு சிவக்குமார், குறிஞ்சிப்பாடி வடக்கு நாராயணசாமி, பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி தலைவர் கோகிலா குமார் உட்பட பங்கேற்றனர்.
10-May-2025