அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் மறியல்
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் மழையால் பாதித்த பகுதிகளை அதிகாரிகள் பார்வையிட வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.நெல்லிக்குப்பம், திருக்கண்டேஸ்வரத்தில் ஏராளமான வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. இதில் ஆனந்த் என்பவரது வீடு இடிந்து விழுந்தது. இப்பகுதிகளை அதிகாரிகள் வந்து பார்க்காததை கண்டித்து அப்பகுதி மக்கள் நேற்று பிற்பகல் 3:00 மணியளவில் கடலுார் - பண்ருட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்து சென்ற இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தி, அதிகாரிகளிடம் கூறி சம்பவ இடங்களை பார்வையிடச் சொல்கிறேன் என கூறியதைத் தொடர்ந்து, 3:30 மணியளவில் மறியலை கை விட்டனர்.