உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தரமில்லாத சாலை பணி: பொதுமக்கள் எதிர்ப்பு

தரமில்லாத சாலை பணி: பொதுமக்கள் எதிர்ப்பு

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சியில் சாலைகள் தரமாக இல்லை எனக்கூறி புதிய சாலை அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நெல்லிக்குப்பம் நகராட்சி மூலம் கடந்த ஒரு ஆண்டில் பல கோடி மதிப்பில் தார் மற்றும் சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டன. சாலை அமைக்கும் பணியை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளும் கண்டு கொள்ளாதாததால் பல இடங்களில் ஜல்லிகள் பெயர்ந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுவதாக பொதுமக்கள் மத்தியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் 9வது வார்டு வைத்திலிங்கம் தெருவில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. இதனையறிந்த அப்பகுதி மக்கள் நேற்று வார்டு தி.மு.க., கவுன்சிலர் சத்யாவிடம் சென்று, நகராட்சியில் பல இடங்களில் புதியதாக போடப்பட்ட சாலைகள் தரமாக இல்லை. இதன் காரணமாக புதியதாக சாலை போட அமைக்கக் கூடாது என தெரிவித்து கலைந்துச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ