மேலும் செய்திகள்
காட்சிப் பொருளான சமுதாய கூடம்
24-Jun-2025
மந்தாரக்குப்பம் : கெங்கைகொண்டான் பேரூராட்சியில் சமுதாய கூடம் பயன்பாட்டிற்கு வராமலேயே வீணாகி வருகிறது. கெங்கைகொண்டான் பேரூராட்சி எஸ்.பி.டி.எஸ்., நகரில் கடந்த 2013ம் ஆண்டு சமுதாய கூடம் அமைக்க அடிக்கல் நாட்டும் விழா நடந்தது. புவனகிரி எம்.எல்.ஏ., தொகுதி நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டு சமுதாய நலக்கூடம் திறப்பு விழா நடந்தது. ஆனால், அதன் பிறகு சமுதாய நலக்கூடம் பயன்பாட்டிற்கு வராமலேயே உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் சுபநிகழ்ச்சியை கூடுதல் செலவு செய்து, தனியார் மண்டபத்தில் நடத்த வேண்டிய நிலை ஏற்படுவதால் சிரமத்திற்கு ஆளாகின்றனர். சமுதாயக் கூடம் பயன்பாட்டிற்கு வராததால் கட்டடம் வீணாகிறது. இவ்வளவு செலவு செய்தும் சமுதாயக் கூடத்தை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் அரசின் நிதி வீணாவதாக மக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் கெங்கைகொண்டான் பேரூராட்சியில் ஆய்வு செய்து சமுதாய கூடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
24-Jun-2025