புத்து மாரியம்மன் கோவில் தேர் திருவிழா
குறிஞ்சிப்பாடி : குறிஞ்சிப்பாடி புத்து மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது குறிஞ்சிப்பாடி பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள பிரசித்தி பெற்ற புத்து மாரியம்மன் கோவில் செடல் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. நேற்று காலை அலங்கரிக்கப்பட்ட தேரில் புத்து மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நகரின் முக்கிய வீதிகளில் வழியாக சென்ற தேர், மீண்டும் நிலையை வந்தடைந்தது.