மேலும் செய்திகள்
கண் சிகிச்சை முகாம்
16-Jun-2025
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம், சக்கரைகுளத்தில் கால்நடைத்துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது. கால்நடை மருத்துவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். லயன்ஸ் கிளப் தலைவர் குமரேசன், செயலாளர் இளஞ்செழியன் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி சேர்மன் செல்வி ஆனந்தன் முகாமை துவக்கி வைத்தார். கால்நடை ஆய்வாளர் வேல்முருகன், லயன்ஸ் கிளப் பொருளாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஸ்ரீமுஷ்ணம் மற்றும் சுற்றுப்புற கிராம பகுதிகளில் 21 நாட்களுக்கு பல்வேறு இடங்களில் முகாம்கள் நடக்கிறது. முகாமில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தங்களின் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளுமாறு கால்நடைத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
16-Jun-2025