உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரயில்வே கேட் உடைந்து விழுந்தது கடலுார் அருகே பரபரப்பு

ரயில்வே கேட் உடைந்து விழுந்தது கடலுார் அருகே பரபரப்பு

புதுச்சத்திரம்: கடலுார் அருகே ரயில்வே கேட் தானாக உடைந்து விழுந்ததால், இரண்டு ரயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது. கடலூர் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த ஆலப்பாக்கம் ரயில்வே கேட் நேற்று காலை 8:45 மணியளவில் தானாக உடைந்து விழுந்தது. இதனால், திருச்சி - தாம்பரம் செல்லும் சிறப்பு ரயில், காரைக்கால் - பெங்களூர் செல்லும் ரயில்ள் செல்வதற்கு சிக்னல் கிடைக்காமல் புதுச்சத்திரம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் உடைந்த ரயில்வே கேட்டினை சேப்டி செயின் மூலம் சீரமைத்தனர். இதனால் இரண்டு ரயில்களும், ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை