ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
விருத்தாசலம்: விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷனில், சதன் ரயில்வே மஸ்துார் யூனியன் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் கணேஷ்குமார் முன்னிலை வகித்தார். எட்டாவது சம்பள கமிஷன் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும். இரண்டரை லட்சம் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். 2004ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த அனைவரையும் பழைய பென்ஷன் திட்டத்தில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், சதன் ரயில்வே மஸ்துார் யூனியன் சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.