உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  வானவில் மன்ற போட்டி

 வானவில் மன்ற போட்டி

ராமநத்தம்: ராமநத்தம் அடுத்த மா.புடையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வட்டார அளவிலான வானவில் மன்ற போட்டி நடந்தது. நிகழ்ச்சிக்கு, மங்களூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். கல்வி அலுவலர்கள் லட்சுமி, கலா முன்னிலை வகித்தனர். வானவில் மன்ற வட்டார ஒருங்கிணைப்பாளர் பார்த்திபன் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் கலையரசன் போட்டியை துவக்கி வைத்தார். ஆசிரியர்கள் மணிகண்டன், நிஷா, அறிவரசன் உட்பட பலர் பங்கேற்றனர். அதில், போட்டியில் பங்கேற்ற அரசு பள்ளி மாணவர்கள் தங்களின் படைப்புகளை காட்சிப்படுத்தினர். வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி