ரெயின் கோட் வழங்கல்
விருத்தாசலம் ; மங்கலம்பேட்டை பேரூராட்சியின் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு ரெயின் கோட் வழங்கப்பட்டது.பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, சேர்மன் சம்சாத் பாரி இப்ராஹிம் தலைமை தாங்கி, துப்புரவு பணியாளர்களுக்கு ரெயின் கோட் வழங்கினார். செயல் அலுவலர் மயில்வாகனன் முன்னிலை வகித்தார். இதில், இளநிலை உதவியாளர் ரங்க ராமானுஜம், பிட்டர் கோவிந்தராஜூ, துப்புரவு மேற்பார்வையாளர் ஜெயப்பிரகாஷ் மற்றும் நகராட்சி ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.