உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சம்பா சாகுபடி நிலங்களை சூழ்ந்த மழைநீர்

சம்பா சாகுபடி நிலங்களை சூழ்ந்த மழைநீர்

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் டெல்டாவில் தொடர் மழையால் நேரடி நெல் விதைப்பு சம்பா சாகுபடி நிலங்களில் மழைநீர் தேங்கி பாதிப்பு ஏற்படும் நிலை இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். காட்டுமன்னார்கோவில் டெல்டா பகுதியில் 50,000 ஏக்கர் பரப்பில் நேரடி நெல் விதைப்பு மூலமாக ஒரு போக சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன் பெய்த மழையால் முளைப்பு ஏற்பட்டு தற்போது 10 முதல் 15 நாட்கள் கொண்ட இளம் நாற்று பயிர்களாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக டெல்டா பகுதியில் பலத்த மழை பெய்கிறது. குறிப்பாக, நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை பரவலான மழை பெய்தது. காட்டுமன்னார்கோவிலில் 14.2 மி.மீ., லால்பேட்டையில் 11 மி.மீ., குமராட்சியில் 20 மி.மீ., மழை பதிவானது. இதன் காரணமாக சம்பா நெல் சாகுபடி நிலங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் நெல் பயிர்களில் பழுப்புத் தன்மை ஏற்பட்டு வளர்ச்சி குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கவலை அடைந் துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை