உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரேஷன் கடை கட்டடம் : எம்.எல்.ஏ., திறப்பு

ரேஷன் கடை கட்டடம் : எம்.எல்.ஏ., திறப்பு

சேத்தியாத்தோப்பு, : சேத்தியாத்தோப்பு அடுத்த பரிபூரணநத்தம் கிராமத்தில் புவனகிரி எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 11.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி ரேஷன் கடையை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கினார். கூளாப்பாடி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க செயலாளர் சாம்பமூர்த்தி, கூட்டுறவு சார் பதிவாளர் (பொது வினியோத் திட்டம்) கணேசன், கனகசபை முன்னிலை வகித்தனர். கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் கருப்பன், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், மாநில துணை செயலாளர் அருளழகன், பாஸ்கரன், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை செயலாளர் கமலக்கண்ணன், அரங்கப்பன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் ஆனந்தகுமார், மகளிரணி நந்தினி, செல்வி, சரண்யா, தங்கதுரை, குஞ்சிபாதம், கேசவபெருமாள், சிற்றரசு பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ