ரேஷன் கடை கட்டடம்: எம்.எல்.ஏ., அடிக்கல்
பரங்கிப்பேட்டை; சிதம்பரம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி 16 லட்சம் ரூபாய் மதிப்பில் பரங்கிப்பேட்டை அடுத்த குமாரப்பேட்டை கிராமத்தில், புதிய ரேஷன் கடை மற்றும் காத்திருப்போர் கூடம் கட்ட பூமி பூஜை நடந்தது. பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் ரெங்கசாமி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள், மாவட்ட பாசறை செயலாளர் வசந்த், கிராம தலைவர் தமிழரசன் முன்னிலை வகித்தனர். பாண்டியன் எம்.எல்.ஏ., பூமி பூஜையை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், மாவட்ட மீனவரணி செயலாளர் வீராசாமி, முன்னாள் துணை சேர்மன் முடிவண்ணன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செல்வரங்கம், நகர இளைஞரணி செயலாளர் ஜெய்சங்கர், நகர ஜெ., பேரவை செயலாளர் சந்தர் ராமஜெயம், ஒன்றிய பொருளாளர் பாஸ்கர், முன்னாள் ஊராட்சி துணை தலைவர் விஜயராஜா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் தமிழரசி ரோகபரணி, ரவி, அகிலநாயகி, இலக்கிய அணி செயலாளர் மாரிமுத்து, மாவட்ட மீனவரணி பொருளாளர் நாகராஜ், முன்னாள் ஊராட்சி தலைவர் மகேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.