உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரேஷன் கடை, சிமென்ட் சாலை பணி அய்யப்பன் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

ரேஷன் கடை, சிமென்ட் சாலை பணி அய்யப்பன் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

கடலுார் வில்வராயநத்தத்தில் ரேஷன் கடை கட்டும் பணி மற்றும் தட்சன்குளம் தெருவில் சிமென்ட் சாலை பணிக்கு பூமி பூஜை நடந்தது.கடலுார் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், வில்வராயநத்தம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் 17 லட்சம் ரூபாய் மதிப்பில் ரேஷன்கடை கட்டுமானப்பணி நடைபெற உள்ளது.இதற்கான பூமி பூஜைக்கு அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பணியை துவக்கி வைத்தார். மாநகராட்சி கமிஷனர் அனு முன்னிலை வகித்தார்.அப்போது வில்வநகர் பூங்கா சரியாக பராமரிக்கப்படவில்லை எனவும், பூங்காவை சுத்தப்படுத்தி, நடைபாதையை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ., தெரிவித்தார்.தொடர்ந்து 3வது வார்டு தட்சன்குளம் தெருவில் 8.5 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியையும் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். மாநகராட்சி கவுன்சிலர் சரிதா, கூட்டுறவு சங்கத்தலைவர் ஆதி பெருமாள், குடியிருப்பு சங்கத் தலைவர் ராஜேந்திரன், துணைத் தலைவர்கள் ராமதாஸ், பாலு மற்றும் தி.மு.க.,கிளை நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை