ரேஷன் கடை கட்டுமான பணி: எம்.எல்.ஏ., ஆய்வு
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த பரிபூரணநத்தம் கிராமத்தில் புதிய ரேஷன் கடை கட்டுமானப் பணியினை அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.சேத்தியாத்தோப்பு அடுத்த பரிபூரணநத்தம் கிராமத்தில், புவனகிரி எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய் 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. இதனை அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும், விரைந்தும் முடிக்க வேண்மென, அறிவுறுத்தினார்.மாவட்ட ஜே., பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், கீரப்பாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் கருப்பன், நல்லுார் ஒன்றிய செயலாளர் முத்து, குஞ்சீதபாதம், எம்.ஜி.ஆர்., மன்ற இளைஞரணி மாவட்ட இணை செயலாளர் கமலக்கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.