உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரேஷன் கடை: எம்.எல்.ஏ., திறந்து வைப்பு

ரேஷன் கடை: எம்.எல்.ஏ., திறந்து வைப்பு

புவனகிரி: புவனகிரி அடுத்த பூதவராயன்பேட்டையில் சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டடத்தை எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.புவனகிரி அடுத்த பூதவராயன் பேட்டையில் புதிய ரேஷன் கடைக்கான கட்டடம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கி கட்டுமானப் பணிகள் நடந்தது. இதற்கான திறப்பு விழா நேற்று நடந்தது. ஒன்றிய அவைத் தலைவர் ஆண்டவர்செல்வம் தலைமையில், அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., கடையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், புவனகிரி நகர செயலாளர் செல்வகுமார், ஒன்றிய பொருளாளர் தங்கமணி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சங்கர், கிளை செயலாளர்கள் இளவரசன்,குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை