மேலும் செய்திகள்
கிளை நுாலகத்தில் முப்பெரும் விழா
15-Oct-2026
கடலுார்: கடலுார் மாவட்ட மைய நுாலகத்தில் வாசகர் வட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. வாசகர் வட்ட தலைவர் சிங்காரம் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் ஆனந்த கணேசன் வரவேற்றார். பேராசிரியர்கள் ராஜா, ஜான்போஸ்கோ, துணைத் தலைவர் கலைவேந்தன், செயற்குழு உறுப்பினர்கள் சிவசங்கரி, கவிமனோ, ஓய்வு பெற்ற ஆசிரியர் நடராஜன், கருணாமூர்த்தி, உமா மகேஸ்வரி, ஆராய்ச்சி மாணவர் தவமணிகண்டன், நுாலகர்கள் கல்பனா, பற்குணன், சண்முகசுந்தரம் பேசினர். நுாலக வார விழாவை சிறப்பாக கொண்டாடுவதுடன், நுாலக வார விழாவிற்கு அமைச்சர் ராஜ்குமார், நுாலக ஆணை குழு தலைவர் ஜோதிமணி ஆகியோரை அழைப்பது. மாவட்ட மைய நுாலகத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வது. நுாலகத்தில் உறுப்பினர்களை அதிக அளவில் சேர்ப்பது. ஆரம்ப பள்ளி மற்றும் கல்லுாரிகளில் வாசிப்பு இயக்கத்தை துவக்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இரண்டாம் நிலை நுாலகர் ஜோதி நன்றி கூறினார்.
15-Oct-2026