கிளை நுாலகம் இடமாற்றம் வாசகர்கள் கோரிக்கை
மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் கிளை நுாலகத்தை பொதுமக்கள் நடமாட்டம் உள்ள இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டுமென, வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மந்தாரக்குப்பம் என்.எல்.சி., குடியிருப்பு பகுதிகளில் அரசு கிளை நுாலகம் செயல்பட்டு வந்தது. சுரங்க விரிவாக்கப் பணிக்காக என்.எல்.சி.,யின் குடியிருப்பு பகுதிகளை என்.எல்.சி., நிர்வாகம் அகற்றி, தற்போது அந்த இடத்தை கையகப்படுத்தியுள்ளது.இதன் காரணமாக என்.எல்.சி., குடியிருப்பு பகுதிகளில் இருந்த கிளை நுாலகத்தை மந்தாரக்குப்பம் பழைய போலீஸ் ஸ்டேஷன் கட்டடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இடமாற்றம் செய்யப்பட்ட நுாலகம் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் உள்ளதால் மாணவர்கள், முதியவர்கள் ஒருவித அச்சத்துடன் கிளை நுாலகத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.கெங்கைகொண்டான் பேரூராட்சி பகுதிகளில் கிளை நுாலகம் இல்லாததால் வாசகர்கள் அருகில் உள்ள நுாலகங்களுக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, கெங்கைகொண்டான் பேரூராட்சி பகுதியில் கிளை நுாலகத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என வாசகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.