உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அங்கீகார பொங்கல்

அங்கீகார பொங்கல்

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் வி.சி., சார்பில் அங்கீகாரப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.விருத்தாசலம் பாலக்கரையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கீழே வி.சி., சார்பில் அங்கீகாரப் பொங்கல் கொண்டாடப்பட்டது. கடலுார் மைய மாவட்ட செயலாளர் நீதிவள்ளல் தலைமை தாங்கினார். மண்டல துணை செயலாளர் ஐயாயிரம், நகர செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர் சுப்புஜோதி, வழக்கறிஞர் மதுசூதனன் முன்னிலை வகித்தனர்.அதில், வி.சி.,க்கு வழங்கிய பானை சின்னத்துடன் பொங்கல் வைத்து, பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. நிர்வாகிகள் தென்றல், இளங்கோவன், எழில்வான்சிறப்பு, அய்யாதுரை உட்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, மொழிப்போர் தியாகி நடராஜனுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை