உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வட்டார அளவிலான கலைத்திருவிழா

வட்டார அளவிலான கலைத்திருவிழா

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடந்தன. விழாவிற்கு பேரூராட்சி சேர்மன் செல்வி ஆனந்தன் தலைமை தாங்கினார்.பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தங்க கிருஷ்ணமூர்த்தி, பள்ளி தலைமை ஆசிரியர் சிகாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஒருங்கிணைப்பாளர் பரமசிவம் வரவேற்றார். வட்டாரக் கல்வி அலுவலர்கள் மன்னர் மன்னன், இந்திரா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். இதில் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்துக்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச்சேர்ந்த மாணவ, மாணவிகள் கதை கூறுதல், தனி நடனம், கிராமிய நடனம், திருக்குறள் ஒப்புவித்தல், ஓவியம் வரைதல் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்றனர். வட்டார வள மேற்பார்வையாளர் குணசேகரன்,ஆசிரியர் பயிற்றுநர்கள் தனவேல், நாராயணசாமி, சிறப்பு பயிற்றுநர்கள் கோவிந்தராஜ், வீரமணி, ரேவதி, கணக்காளர் அனிதா உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை