மேலும் செய்திகள்
மாணவி தற்கொலை; துணை கமிஷனர் விசாரணை
18-Apr-2025
அவலுார்பேட்டை : மேல்மலையனுார் அருகே கல்லுாரி மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.மேல்மலையனுார் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. திருவண்ணாமலையில், தனியார் கல்லுாரியில் படித்து வந்தார். இவர், கடந்த 19ம் தேதி வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து அவரது பெற்றோர், தனது மகளை ஒரு நபர் பாலியல் தொல்லை கொடுத்ததால் மனமுடைந்து தற்கொலை செய்த கொண்டார் என மேல்மலையனுார் போலீசில் புகார் அளித்தனர்.ஆனால், புகார் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நேற்று இரவு 7:30 மணிக்கு, செஞ்சி - திருவண்ணாமலை சாலை பாலப்பாடி கூட்ரோட்டில் 20க்கும் மேற்பட்ட மாணவியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நல்லான்பிள்ளைபெற்றாள் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி 8:00 மணியளவில் கலைந்து போகச் செய்தனர்.
18-Apr-2025