உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வேப்பூரில் 175 பேருக்கு நிவாரண தொகை வழங்கல்

வேப்பூரில் 175 பேருக்கு நிவாரண தொகை வழங்கல்

வேப்பூர் : வேப்பூர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட 175 பேருக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டது.மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக வீடுகள் மற்றும் கால்நடைகள் இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கப்படுமென அரசு அறிவித்தது. அதில், மழையால் இடிந்த குடிசை வீட்டுக்கு ரூ. 8 ஆயிரம், ஓட்டு வீட்டுக்கு, ரூ. 6,500, இறந்த கால்நடைகளுக்கு தலா ரூ. 37 ஆயிரம், கன்றுக்கு ரூ. 20 ஆயிரம், ஆடுக்கு ரூ. 4 ஆயிரம், இறந்தவருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, வேப்பூர் தாலுகாவில் வருவாய்த்துறை சார்பில் மழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடந்தது. அதில், 103 குடிசை வீடுகளும், 51 ஓட்டு வீடுகள் இடிந்தன. 4 மாடுகள், 5 கன்றுகள், 11 ஆடுகள் இறந்தன. மேலும், மின்னல் தாக்கி ஒருவர் இறந்தார். அவர்களுக்கு, வேப்பூர் தாசில்தார் மணிகண்டன் உத்தரவின்படி, மழை பாதிப்பு நிவாரண உதவித்தொகை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை