உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றம் விருத்தாசலம் அருகே பரபரப்பு

அரசு இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றம் விருத்தாசலம் அருகே பரபரப்பு

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே நத்தம் புறம்போக்கில் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றியதால் பரபரப்பு நிலவியது. விருத்தாசலம் அடுத்த சின்னப்பரூர் ஆதிதிராவிடர் வசிப்பிடத்தில், நத்தம் புறம்போக்கு நிலத்தை தனிநபர் ஆக்கிரமித்து கழிவறை கட்டி பயன்படுத்தி வருவதாக அப்பகுதியை சேர்ந்த ரோஜா அமிர்தம் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், விருத்தாசலம் மண்டல துணை தாசில்தார் அன்பரசன், வருவாய் ஆய்வாளர் அருந்ததி, வி.ஏ.ஓ., சத்யராஜ் ஆகியோர் மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பை அகற்ற சென்றனர். அப்போது, கழிவறையை இடிக்க எதிர்ப்பு தெரிவித்த தனிநபர், முறையான நீதிமன்ற உத்தரவு இல்லாமல் இடிக்க கூடாது என வாக்குவாதம் செய்தனர். பின்னர், பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கழிவறை கட்டடம் மற்றும் அங்கு உளுந்து சாகுபடி செய்திருந்த வயல், மரங்கள், கொட்டகை என அனைத்தையும் பாரபட்சமின்றி அகற்றப்பட்டது. இந்த சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை