மேலும் செய்திகள்
லாரி மோதி இடிந்த நிழற்குடை புதுப்பிக்க கோரிக்கை
13-Oct-2025
விருத்தாசலம்: 'தினமலர்' செய்தி எதிரொலியால், விருத்தாசலம் தாலுகா அலுவலக வளாகத்தில் பழுதான நிழற்குடையை சீரமைக்கும் பணி துவங்கியது. விருத்தாசலம் தாலுகா அலுவலகத்திற்கு தினசரி நுாற்றுக்கணக்கான பயனாளிகள் வந்து செல்கின்றனர். இங்கு, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நிழற்குடை கட்டப்பட்டது. இதன் மூலம் பயனாளிகள், அரசு அலுவலர்கள் பயனடைந்தனர். இந்நிலையில், நிழற்குடை பராமரிப்பின்றி மேற்கூரையில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தும், பில்லர்கள் வலுவிழந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்தன. இதனால் மழை காலங்களில் நிழற்குடையின் ஒரு பகுதி இடிந்து விழும் அபாயத்தில் இருந்தது. இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் சார்பில் நிழற்குடையை சீரமைக்கும் பணி நேற்று துவங்கியது. இதற்காக, பழுதான பில்லர், சுவரின் ஒருபகுதியை அகற்றி விட்டு, புதுப்பிக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதேபோல், கடந்த ஆட்சியில் 10 லட்சம் ரூபாயில் கட்டப்பட்டு பாழாகி வரும் குளிர்சாதன நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
13-Oct-2025