உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சூறாவளியில் சேதமடைந்த மின் கம்பங்கள் சீரமைப்பு

சூறாவளியில் சேதமடைந்த மின் கம்பங்கள் சீரமைப்பு

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் சூறாவளி காற்றுக்கு சேதமடைந்த மின்கம்பங்கள் சீரமைககும் பணி நடந்தது. விருத்தாசலத்தில் நேற்று முன்தினம் மாலை சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. அப்போது, பெரியார் நகர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் பின்புறம் இருந்த பழமையான வேப்ப மரம் முறிந்து டிரான்ஸ்பார்மர்கள் மீது விழுந்தது. இதேப் போன்று, அமுதம் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. இரவு 9:00 மணிக்கு தற்காலிகமாக மின்சப்ளை வழங்கப்பட்டது. தொடர்ந்து, மின்வாரிய செயற்பொறியாளர் சுகன்யா முன்னிலையில் நேற்று காலை முதல் மரக்கிளைகளை முழுவதுமாக வெட்டி அகற்றி, மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் புதிதாக பொறுத்தி, மின் விநியோகம் சீராக வழங்கப்பட்டது. இதனால் பெரியார் நகர் பகுதியில் காலை 10:30 முதல், இரண்டு மணி நேரம் மின்நிறுத்தம் செய்யப்பட்டது. 9.5 கோடி ரூபாயில் புனரமைக்கப்பட்ட ரயில்வே ஸ்டேஷன் முகப்பு பகுதியில் அலங்கார வளைவில் இருந்த ஷீட் பெயர்ந்து விழுந்தது. இதனை ரயில்வே நிர்வாகம் சார்பில் உடனடியாக சீரமைக்கும் பணி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை