உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரிஸ்டோ பள்ளியில் குடியரசு தின விழா

அரிஸ்டோ பள்ளியில் குடியரசு தின விழா

கடலுார்; கடலுார் கம்மியம்பேட்டை அரிஸ்டோ பப்ளிக் பள்ளியில் 76 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.பள்ளி தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கி, தேசிய கொடி ஏற்றி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தேசத் தலைவர்களின் புகைப்படங்களுக்கு மலர்துாவி மரியாதை செலுத்தினர். பள்ளி முதல்வர் மதுரபிரசாத் பாண்டே வரவேற்றார். இதில், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பள்ளி தலைவர் சிவக்குமார், தேசப்பற்று கருத்துகளை மாணவர்களுக்கு எடுத்துக்கூறி சிறப்புரையாற்றினார்.அப்போது, பள்ளி துணை முதல்வர் மீனாட்சி, ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை