| ADDED : டிச 06, 2025 06:36 AM
கடலுார்: போக்குவரத்து போலீசார், தனியார் பஸ்களுக்கு அதிகப்படியான அபராதம் விதிப்பதை தவிர்க்க கோரிக்கை எழுந்துள்ளது. கடலுார், பண்ருட்டி தாலுகா தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் சார்பில், டி.எஸ்.பி., தமிழ் இனியனை, பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் அவரிடம், உரிய அனுமதியின்றி அதிகப்படியான ஷேர் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. கல்லுாரி மாணவர்கள் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்கின்றனர். படிக்கட்டுகளில் நின்று கொண்டு பயணிக்கின்றனர். தட்டிக்கேட்டால் பிரச்னை ஏற்படுகிறது. போக்குவரத்து போலீசார் தனியார் பஸ்களுக்கு அதிகப்படியாக அபராதம் விதிப்பதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர். இது குறித்து உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக டி.எஸ்.பி., தெரிவித்தார். கடலுார் - பண்ருட்டி தாலுகா தனியார் பஸ் உரிமை யாளர் சங்க தலைவர் வேலவன், செயலாளர் சதீஷ்குமார், பொருளாளர் சிவாஜி, துணைத் தலைவர் குபேந்திரன் மற்றும் பஸ் உரிமையாளர்கள் மாரியப்பன், ரவி, முருகன், சாய் குமார் யுவராஜ், சத்யநாராயணன் நடராஜ், ஸ்ரீராம், ஜெயச் சந்திரன், விமல் ராஜ், நிர்மல் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.