மேலும் செய்திகள்
பெரிய ஓடையில் மேம்பாலம் 10 கிராம மக்கள் கோரிக்கை
13-Aug-2025
பெண்ணாடம்: ரசிங்கமங்கலம் - தாழநல்லுார் இடையே பாலம் கட்ட வேண்டும் என 2 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெண்ணாடம் அடுத்த நரசிங்கமங்கலம் - தாழநல்லுார் இடையே உள்ள வாய்க்காலின் மீது கான்கிரீட் சாலையை பயன்படுத்தி தாழநல்லுார், தீவளூர், எரப்பாவூர், அருகேரி, சிறுமங்கலம், கோவிலுார், எடையூர் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைக்கு விருத்தாசலம், பெண்ணாடம், வேப்பூர், நல்லுார் பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். மழைக் காலங்களில் வெள்ள நீரில் கான்கிரீட் சாலை மூழ்குவதால் நரசிங்கமங்கலம் பகுதி மக்கள் 13 கி.மீ., துாரமுள்ள பெண்ணாடம் சென்று அங்கிருந்து விருத்தாசலம் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதேபோன்று தாழநல்லுார் பகுதி மக்கள் 10 கி.மீ., துாரம் சுற்றி பெண்ணாடம் சென்று அங்கிருந்து வேப்பூர், நல்லுார் பகுதிக்கு செல்ல வேண்டும். இதனால் காலவிரயம் ஏற்படுவதால் 2 கிராம மக்கள் அவதியடைவது தொடர் கதையாக உள்ளது. எனவே, 2 கிராம மக்கள் நலன் கருதி நரசிங்கமங்கலம் - தாழநல்லுார் இடையே பாலம் கட்ட நட வடிக்கை எடுக்க வேண்டும்.
13-Aug-2025