உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கீழக்குறிச்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கோரிக்கை

 கீழக்குறிச்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கோரிக்கை

வேப்பூர்: வேப்பூர் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேப்பூர் அடுத்த கீழக்குறிச்சி கிராமத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதனை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காய்ச்சல், பிரசவம் உள்ளிட்டவைகளுக்கு 12 கி.மீ., துாரமுள்ள வேப்பூர் அரசு மருத்துவமனைக்கும், 18 கி.மீ., துாரத்தில் உள்ள நல்லுார் வட்டார அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுகின்றனர். ஏழை, எளிய மக்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் அவசர மருத்துவ தேவைகளுக்கு, பல கி.மீ., துாரம் செல்ல வேண்டியுள்ளது. மேலும், இரவு நேரத்தில் வாகன வசதி இல்லாததாலும், கால விரையம், கூடுதல் செலவினம் ஏற்படுவதால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைகின்றனர். எனவே, கீழக்குறிச்சியில் புதிதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி