விபத்துகளை கட்டுப்படுத்த சிக்னல் அமைக்க கோரிக்கை
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த எறும்பூர் வளைவில் விபத்துக்களை தடுக்க சிக்னல் அமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருத்தாசலம்-பரங்கிப்பேட்டை சாலை வழியாக தினசரி லாரிகள், கனரக லாரிகள், பஸ், கார் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் செல்கிறது. இந்த சாலையில், சேத்தியாத்தோப்பு அடுத்த எறும்பூரில் ஆபத்தான வளைவுகள் உள்ளது. இங்கு, போக்குவரத்து சிக்னல் இல்லாததால், இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. விபத்தை கட்டுப்படுத்த போலீசார், பேரிகார்டு வைத்தும் பலனில்லை. நாளுக்கு நாள் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. வாகன ஓட்டுகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.