மேலும் செய்திகள்
இரட்டை ரயில் பாதை
24-Sep-2024
சிதம்பரம்: சிதம்பரத்தில் முக்கிய ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அமைச்சர் பன்னீர்செல்வத்திடம், ரயில் பணிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.சிதம்பரம் ரயில் பயணிகள் சங்க தலைவர்அப்துல் ரியாஸ், செயலாளர் கம்பன், அம்பிகாபதி, உறுப்பினர் மஹபூப் உசேன்,சட்ட ஆலோசகர் வக்கீல் ஸ்ரீதர் ஆகியோர், வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வத்தை சந்தித்து, கோரிக்கைமனு அளித்தனர்.மனுவில், உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலமாக சிதம்பரம் உள்ளதால், தினமும்ஆயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.எனவே, சுற்றுலா பயணிகள் மற்றும் ரயில் பயணிகள் வசதிக்காக, சிதம்பரம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை, தாம்பரம் - காரைக்கால், அயோத்தி - ராமேஸ்வரம் ரயில்கள் சிதம்பரத்தில் நின்று செல்லவும், மயிலாடுதுறை -கோவை ரயிலை, சிதம்பரம் வரை நீட்டிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து தெற்கு ரயில்வே தலைமையகம் மற்றும் டில்லி ரயில்வே வாரியத்தில், தமிழக அரசு சார்பில்,அழுத்தம் கொடுக்க வேண்டும். மேலும், கடலுார் ரயில் நிலையத்தில் மன்னை எகஸ்பிரஸ்,மஹால் எக்ஸ்பிரஸ் ஆகிய இரு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.
24-Sep-2024