குளத்தில் ஆகாயத்தாமரை முறையாக அகற்ற கோரிக்கை
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் ஊராட்சியில் கடலுார் -பண்ருட்டி சாலையை ஒட்டி ஊராட்சிக்கு சொந்தமான குளம் உள்ளது. இந்த குளத்தில் ஆகாயதாமரை செடிகள் வளர்ந்து குளம் முழுவதும் பரவியிருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன் 9 லட்சம் ரூபாய் செலவில் ஆகாயதாமரை செடிகளை அகற்றினர்.அதை அப்புறப்படுத்தாமல் க ரையிலேயே போட்டனர். இந்நிலையில், கடந்த அக்டோபரில் பெய்த மழையில் கரையில் இருந்த ஆகாய தாமரை செடிகள் குளத்துக்கு சென்று குளம் முழுவதும் பரவி வளர்ந்துள்ளன. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'குளத்தை பெயரளவுக்கு துார் வாரியதால் மக்கள் வரிப்பணம் பாழானது. இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.