உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்த கோரிக்கை

ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்த கோரிக்கை

சிறுபாக்கம்: சிறுபாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மாவட்டத்தின் கடைக்கோடியிலுள்ள சிறுபாக்கம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு, அரசங்குடி, எஸ்.புதூர், நரையூர், சித்தேரி, ஒரங்கூர், மா.குடிக்காடு, மாங்குளம் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சை பெற்று பயனடைகின்றனர். இந்நிலையில், டாக்டர்கள் காலை 10:00 முதல் - 2:00 மணி வரை மட்டுமே பணியில் உள்ளனர்.மற்ற நேரங்களில் டாக்டர்கள் இல்லாததால், அவசர சிகிச்சைக்கு வருவோர் சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளது. நோயாளிகள் சிகிச்சை பெற போதிய இட வசதியும், சிகிச்சை உபகரணங்களும் இல்லாததால் சிரமமடைகின்றனர். எனவே, சிறுபாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, தரம் உயர்த்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை