பயணியர் நிழற்குடை அமைக்க கோரிக்கை
பரங்கிப்பேட்டை: பெரியகுமட்டி கிராமத்தில் அகற்றப்பட்ட பயணியர் நிழற்குடையை மீண்டும் அமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து காங்., சமூக ஊடக பிரிவு மாநில செயலாளர் சுந்தரவேல், புதுச்சேரியில் உள்ள இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குநருக்கு அனுப்பியுள்ள மனு; விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்குவழிச் சாலைப் பணி நடந்து வருகிறது. இப்பணிக்காக பரங்கிப்பேட்டை அடுத்த பெரியகுமட்டி கிராமத்தில் இருந்த பயணியர் நிழற்குடை அகற்றப்பட்டது. தற்போது, சாலை பணி முடிந்த நிலையில் இருபுறமும் இருந்த பயணியர் நிழற்குடையை மீண்டும் அமைக்கவில்லை. இதனால், பயணிகள் மிகவும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மழை காலங்களில் நிழற்குடை பயணிகளுக்கு மிக அவசியம். எனவே, பெரியகுமட்டி கிராமத்தில் சாலையின் இருபுறமும் பயணியர் நிழற்குடையை மீண்டும் அமைத்துத்தர வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.