உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  என்.எல்.சி., விவகாரம் அமைச்சரிடம் கோரிக்கை

 என்.எல்.சி., விவகாரம் அமைச்சரிடம் கோரிக்கை

நெய்வேலி: என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென, என்.எல்.சி., - பி.எம்.எஸ்., தொழிற்சங்க தலைவர் வீரவன்னிய ராஜா கோரிக்கை விடுத்துள்ளார். ஐதராபாத்தில் பாரதிய மஸ்துார் சங்கத்தின் தலைமை அலுவலகத்தை மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், என்.எல்.சி., - பி.எம்.எஸ்., தொழிற்சங்கத்தின் தலைவரும், இதர பிற்படுத்தப்பட்டோர் பேரவையின் அகில இந்திய பொதுச் செயலாளரான வீர வன்னிய ராஜா, நெய்வேலி நகர பா.ஜ., தலைவர் மணிகண்டன் ஆகியோர் என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென மனு அளித்தனர். இதுகுறித்து வீரவன்னியராஜா கூறுகையில், 'மனுவை பெற்று கொண்ட அமைச்சர் விரைவில் நெய்வேலி வருவதாகவும், அப்போது கோரிக்கைகள் குறித்து நிர்வாகத்திடம் பேசுவதாகவும் உறுதி அளித்தார். மேலும், என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்கள், இன்கோசர்வ் சொசைட்டி தொழிலாளர்கள், ஹவுஸ் கீப்பிங் தொழிலாளர்கள், என்.எல்.சி., நிறுவனத்திற்கு வீடு மற்றும் நிலம் கொடுத்த விவசாய குடும்பத்தினர், என்.எல்.சி.,யில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களையும் சந்திக்க உள்ளார்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை