நகராட்சி கமிஷனரிடம் கோரிக்கை மனு
விருத்தாசலம்; அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் விருத்தாசலம் கிளை சார்பில், மாவட்ட பொறுப்பாளர் ராஜசங்கர் தலைமையிலான நிர்வாகிகள் நேற்று நகராட்சி கமிஷனர் பானுமதியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், விருத்தாசலம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு அரசாணை 62ன் படி சம்பளம் வழங்க வேண்டும். துாய்மை பணியாளர்களுக்கு பிடித்தம் செய்யப்பட்டுள்ள இ.பி.எப்., மற்றும் இ.எஸ்.ஐ., வழங்க வேண்டும். விருத்தாசலம் நகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும், என கூறப் பட்டிருந்தது.