உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த கோரிக்கை

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த கோரிக்கை

சேத்தியாத்தோப்பு, : சேத்தியாத்தோப்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சேத்தியாத்தோப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு சேத்தியாத்தோப்பு மற்றும் சுற்றியுள்ள 40க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், என 200க்கும் மேற்பட்டோர் தினசரி சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். ஆரம்ப சுகாதார நிலையத்தில் வாரந்தோறும் கர்ப்பிணி பெண்களுக்கான மருத்துவ பரிசோதனைகள், ஊட்டச்சத்து மாத்திரை மருந்துகள் வழங்கப்படுகிறது. இங்கு, மருத்துவர்கள், செவிலியர்கள், லேப் டெக்னிஷியன், மருந்தாளுனர் குறைந்த எண்ணிக்கையில் உள்ளனர்.சேத்தியாத்தோப்பை சுற்றி பெரிய அளவில் அரசு மருத்துவமனைகள் இல்லாததால் அருகில் உள்ள ஊர்களுக்கு சென்று சிகிக்சை பெற பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். சேத்தியாத்தோப்பு அருகே புதிய விக்கிரவாண்டி-தஞ்சாவூர் பைபாஸ் சாலை விபத்துக்கள் ஏற்பட்டால் கூட அருகில் மருத்துவமனை இல்லாததால் 25 கி.மீ., துாரம் உள்ள சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். இதனால், கூடுதல் செலவு, நேரம் விரயமாகிறது. எனவே, ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தினால் அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் பெற முடியும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை