உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தாழநல்லுார் விளையாட்டு திடலை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

தாழநல்லுார் விளையாட்டு திடலை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

பெண்ணாடம்:தாழநல்லுாரில் பாழாகி வரும் விளையாட்டு திடலை கிராம பகுதிக்குள் அமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்ணாடம் அடுத்த தாழநல்லுார் ஊராட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள ரயில் நிலையம் செல்லும் சாலையோரம் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் விளையாட்டுத் திடல் அமைக்கப்பட்டது. ஆனால் 2 கி.மீ., துாரம் உள்ளதால் இளைஞர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அங்கு சென்று விளையாட முடியாமல் சிரமம் அடைகின்றனர். இதனால் விளையாட்டுத் திடலை இளைஞர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தாழநல்லுாரில் பாழாகி வரும் விளையாட்டுத் திடலை, கிராம பகுதிக்குள் அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி