மேலும் செய்திகள்
கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
04-Jun-2025
பண்ருட்டி; பண்ருட்டியில் நகர தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா நடந்தது. நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் தலைமை தாங்கி, நான்குமுனைசந்திப்பில் உள்ள கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்தார். மாவட்ட அவை தலைவர் நந்தகோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பின், அன்னதானம் வழங்கினர்.மாவட்ட துணை செயலாளர்கள் தணிகைசெல்வம், ஆனந்தி சரவணன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் கதிர்காமன், நகரமன்ற துணை தலைவர் சிவா, மாவட்ட வர்த்தக அணி தலைவர் குணசேகரன், நகர அவை தலைவர் ராஜா, நகர பொருளாளர் ராமலிங்கம், நகர துணை செயலாளர் கவுரி அன்பழகன், மாவட்ட பிரதிநிதிகள் சரவணன், பிரபு, வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் பரணி சந்தர், நகர துணை செயலாளர் சசிகுமார், வர்த்தக அணி துணை அமைப்பாளர் ராம்குமார் பங்கேற்றனர்.
04-Jun-2025