ரைசிங் என்.சி.சி., அமைப்பு துவக்கம்
சேத்தியாத்தோப்பு,: சேத்தியாத்தோப்பு டி.ஜி.எம்., பள்ளியில் ரைசிங் என்.சி.சி., அமைப்பு துவக்க விழா நடந்தது.பள்ளி நிர்வாகக் குழு கல்பனா ராமச்சந்திரன் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றினார். என்.சி.சி., ஆசிரியர் வசந்தராஜன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் நன்மாறன் வரவேற்றார்.பள்ளி தாளாளர் ராமச்சந்திரன், பள்ளி நிர்வாக கமிட்டி மாதரி ராமச்சந்திரன், அண்ணாமலை பல்கலைக்கழக என்.சி.சி., 6 வது பட்டாலியன் அதிகாரி சி.எஸ்.ராவ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர்.ஆசிரியர்கள், என்.சி.சி., மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.