மேலும் செய்திகள்
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
09-Dec-2024
கடலுார்: கடலுார் மாநகராட்சி பள்ளியில், போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியில் போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமை தாங்கி பேசியதாவது, பள்ளி மாணவர்கள் சாலையை கடக்கும் போது கவனமாக கடக்க வேண்டும். 18 வயதிற்குட்பட்டவர்கள் வாகனங்கள்ஓட்டுவது சட்டப்படி குற்றம். 18 வயது நிறைவு பெற்ற பின் ஓட்டுனர் உரிமம் பெற்று வாகனங்களைஓட்ட வேண்டும். பஸ்சில் பயணம் செய்யும்போது படிக்கட்டில் தொங்காமல் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
09-Dec-2024