உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  அடிப்படை வசதிகள் கோரி சாலை மறியல் முயற்சி

 அடிப்படை வசதிகள் கோரி சாலை மறியல் முயற்சி

வேப்பூர்: அடிப்படை வசதிகள் நிறைவேற்ற கோரி கிராம மக்கள் மறியலில் ஈடுபட முயற்சி செய் ததால் பரபரப்பு நிலவியது. வேப்பூர் அடுத்த கீரம்பூர் கிராமத்தில், 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு குடிநீர், தெரு மின் விளக்கு, மாணவர்களுக்கு பஸ் வசதி செய்ய கோரி, நல்லுார் பி.டி.ஓ.,விடம் மனு அளித்தும் பலனில்லை. இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள், 50க்கும் மேற்பட்டோர், நேற்று மாலை 6:00 மணியளவில் விருத்தாசலம்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்து வந்த இன்ஸ்பெக்டர்கள் வேப்பூர் பழனிசாமி, விருத்தாசலம் பிரதீப் சந்திரன் ஆகியோர் கிராம மக்களிடம் சமரச பேச்சில் ஈடுபட்டனர். அதில், கிராம மக்களின் கோரிக்கைகளை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதி அளித்தனர். பின், மாலை 6:15 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை